செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அநீதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை உடன் குறைக்க அரசு வேண்டும் | சஜித்

அநீதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை உடன் குறைக்க அரசு வேண்டும் | சஜித்

1 minutes read

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை மீண்டும் குறைக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். பழைய கையிருப்புக்களுக்கு இவ்வாறு எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் நுகர்வோருக்கு கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளன. ஒரு பீப்பாய் எண்ணெய் 70 அமெரிக்க டொலராக அமைந்து காணப்படும் போது இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் கையிருப்புகளுக்கு மத்திய கிழக்கு போர்ச் சூழல் நிலைமையை பயன்படுத்தி விலை சூத்திரத்தை மாற்றி, அதிக விலை அறவிடுவது மிகவும் ஊழல் நிறைந்த செயலாக காணப்படுவதோடு, கடும் தவறான நடவடிக்கையாகவும் காணப்படுகின்றன என்று  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) விசேட கூற்றை முன்வைத்து  தெரிவித்தார்.

எரிபொருட்களின் விலைகளை சடுதியாக அதிகரிக்கின்றன என்று காரணம் காட்டி அதிகரிக்கப்பட்ட விலை மூலம் அரசாங்கம் நாட்டிற்கு பொய் சொல்லியுள்ளது. அதிகரித்த எண்ணெய் விலை சில மணிநேரங்களிலேயே மீண்டும் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதாகவும், ஒரு பீப்பாய் எண்ணெய் விலை, இருந்ததை விட மேலும் குறைந்து கொண்டிருப்பதால் இந்த விலை அதிகரிப்பை நியாயப்படுத்த முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் மீது வரிச்சுமையை அதிகரித்து விலையைக் கூட்டி அழுத்தத்தையும் துயரத்தையும் வியாபிக்கும் அரசாங்கத்தின் இந்த செயலால் நாட்டில் வறுமை அதிகரித்து, தொழிலதிபர்கள், சிறியவர் முதல் சமுதாயத்தின் அனைத்து உற்பத்தியாளர்கள் மற்றும் வருமானம் ஈட்டுபவர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளன. இது அடிப்படை உரிமையை மீறுவதால், மிகவும் ஊழல் நிறைந்த சூத்திரத்தை உடனடியாக மீளப் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

70 டொலருக்கு இறக்குமதி செய்த எண்ணெய் பீப்பாயின் விலையை அடிப்படையாக கொண்டு நாட்டு எரிபொருள் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். அரசாங்கம் அவ்வாறு செய்யாவிட்டால் அது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

வாழும் உரிமைக்கு கடும் அடியாகவும் அமைந்து காணப்படும். ஊழல் நிறைந்த விலை அதிகரிப்பை உடனடியாக நிறுத்தி எடுத்த தீர்மானத்தை மீளப் பெற வேண்டும் என்றும், வலுச்சக்தி பாதுகாப்பிற்காக செய்யக்கூடிய அனைத்து நடைமுறை ரீதியான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

கண் முன்னே நடைபெறும் அழிவை பார்த்தபடி யதார்த்தமற்ற அடிப்படையில் இருந்து நாட்டை ஆள்வதற்கு பதிலாக, மக்கள் மீது அழுத்தத்தையும் சுமையையும் ஏற்றுவதற்கு பதிலாக, நியாயமான முறையை பின்பற்றி மக்களின் நலனில் அக்கறை கொண்டு எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.