செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய உற்சவ ஏற்பாடுகளுக்கான கலந்துரையாடல்

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய உற்சவ ஏற்பாடுகளுக்கான கலந்துரையாடல்

1 minutes read

பாரம்பரிய வரலாற்றுச் சிறப்புமிகு கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடார்ந்த பங்குனி உத்தரப்பொங்கலானது எதிர்வரும் 01.04.2026 பகலிரவு பொங்கலாக நடைபெறவுள்ளது.

பொங்கல் உற்சவ ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் ஆலய முன்றலில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நளாயினி இன்பராஜ், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கரைச்சி பிரதேச சபைத்தவிசாளர்,  கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி ,பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ,பொலிசார் ,திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் , தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர், இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சி சாலை முகாமையாளர், வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை உத்தியோகத்தர்கள், ஆலய பரிபாலான சபையினர் என பலர் கலந்து கொண்டனர்.

பொங்கல் உற்சவத்தில் கலந்து கொள்ளும் மக்களுக்குரிய போக்குவரத்து, குடிநீர் வழங்கல், சுகாதாரம், பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் உரிய அதிகாரிகளோடு கலந்துரையாடப்பட்டன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.