செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புதன்கிழமை விசேட விடுமுறை இரத்து! சற்று முன் வெளியான அறிவிப்பு

புதன்கிழமை விசேட விடுமுறை இரத்து! சற்று முன் வெளியான அறிவிப்பு

1 minutes read

இலங்கையில் ஒவ்வொரு புதன்கிழமையும் வழங்கப்படும் விசேட அரச விடுமுறையானது எதிர்வரும் 8ஆம் திகதி முதல் ரத்து செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிச் சேவை துறைகளுக்காக இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.

இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை முதல் அனைத்து அரச நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

தட்டுப்பாடுகளைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான விநியோகம்,  ஒற்றை – இரட்டை இலக்க முறை மற்றும் புதன்கிழமை பொது விடுமுறை என்பன குறுகிய கால தீர்வுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதன்கிழமை விடுமுறை முறைமை, நிலைமை வழமைக்குத் திரும்பியதும் நீக்கப்பட்டு, நாட்டின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விநியோகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான விநியோகம், ஒற்றை – இரட்டை இலக்க முறை என்பன குறுகிய கால தீர்வுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

விநியோக நிலைமை மேலும் சீரடையும் பட்சத்தில், தற்போதுள்ள கட்டுப்பாடுகளைப் படிப்படியாக நீக்க அரசாங்கம் தயாராக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறையில் நேற்று (05.04.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகம்

அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்காக ஏப்ரல் மாதத்திற்குள் 9 எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன. எனவே பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை.

மத்திய கிழக்கு போர் வெடித்ததன் பின்னர் உருவான எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் ஏற்கனவே வெற்றிகரமாக நிர்வகித்துள்ளது.

தட்டுப்பாடுகளைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான விநியோகம், ஒற்றை – இரட்டை இலக்க முறை மற்றும் புதன்கிழமை பொது விடுமுறை என்பன குறுகிய கால தீர்வுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன.

புதன்கிழமை விசேட விடுமுறை இரத்து! சற்று முன் வெளியான அறிவிப்பு | Change In Fuel Supply

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.