செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு 05 இலட்சம் ரூபாய் அபராதம்!

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு 05 இலட்சம் ரூபாய் அபராதம்!

1 minutes read

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசியை விற்பனை செய்த வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி நிலையத்திற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (05) 05 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அறிவிப்பின் படி, ஒரு கிலோகிராம் உள்ளூர் நாடு அரிசியின் நிர்ணயிக்கப்பட்ட விலை 230 ரூபாவாகும். இருப்பினும், குறித்த விற்பனை நிலையம் அதனை 320 ரூபாவிற்கு விற்பனை செய்து, ஒரு கிலோவிற்கு 90 ரூபாய் மேலதிகமாக அறவிட்டுள்ளமை சோதனையின் போது கண்டறியப்பட்டது.

அரிசி விலையை அதிகரித்து நுகர்வோரை ஏமாற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே இந்த சம்பவம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது, அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை சரிபார்க்குமாறும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக ஒருபோதும் செலுத்த வேண்டாம் என்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

விலை மோசடி தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்க விரும்புவோர், 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகார சபையின் அவசர இலக்கத்திற்குத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.