செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வலி.வடக்கு காணி விடுவிப்பு | கடற்றொழில் அமைச்சர் கூறிய அனைத்தும் அப்பட்டமான பொய் | கஜேந்திரகுமார்

வலி.வடக்கு காணி விடுவிப்பு | கடற்றொழில் அமைச்சர் கூறிய அனைத்தும் அப்பட்டமான பொய் | கஜேந்திரகுமார்

1 minutes read

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும் தெரிவிக்காத நிலையில், கடற்றொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் விதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு பிரதி அமைச்சரின் பங்கேற்புடன் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.

அதில் இராணுவ தரப்பினர் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவொரு சாதகமான பதிலையும் தெரிவிக்காமலேயே கூட்டம் நிறைவடைந்துள்ளது.

மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு முடிவினையும் சாதகமாக எடுக்காமல், காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் பல சமயங்களில் திட்டவட்டமாக நிராகரித்தும், சில விடயங்களில் பரிசீலிப்போம் என தட்டிக்கழிக்கும் பதிலையும் கூறியுள்ளனர். மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு விடயத்திலும் சாதகமாக முடிவு எடுக்கப்படுவதில்லை. ஆனால் மூடிய அறைக்குள் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில், கடற்றொழில் அமைச்சர் வெளியே வந்து ஊடகங்களுக்கு முன்னால், சாதகமான பல விடயங்கள் நடைபெற்றுள்ளதாகவும், விரைவில் தீர்வுகள் காணப்படும் என்றும் அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார்.

இந்த பொய்யை மக்கள் மட்டத்தில் விதைக்க தான் தமது கட்சி சாராத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதேபோல வலி. வடக்கு பகுதி தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரை அழைத்திருக்க வேண்டும். அவர்களையும் அழைக்கவில்லை.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை அழைக்காது மூடிய அறைக்குள் மக்கள் பக்கம் இருந்து பேசக்கூடிய விடயங்களை பேசாது வெளியே வந்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் பொய்யை சொன்னது கண்டிக்கப்படக்கூடிய விடயம் என மேலும் தெரிவித்தார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.