செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

0 minutes read

இலங்கையில் தனது பதவிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து கொண்டு, விரைவில் இந்தியா திரும்பவுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இலங்கையில் தான் கடமையாற்றிய காலப்பகுதியில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது தரப்பினரிடமிருந்து தனக்குக் கிடைத்த அளப்பரிய ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்காக, இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே இதன்போது தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புகள் குறித்தும் இச்சந்திப்பின் போது சுமுகமாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.