செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

1 minutes read

நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவுக்கும் சுவிட்ஸர்லாந்துக்கும் இடையிலான பீபா உலகக் கிண்ண கடைசி கால் இறுதிப் போட்டி கென்சாஸ் சிட்டி விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதுவரை தோல்வி அடையாமல் இருக்கும் இந்த இரண்டு அணிகளுக்கும் இந்தப் போட்டி வாழ்வா சாவா என்ற போராட்டத்தை ஏற்படுத்தவுள்ளது.

இந்த வருட உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றில் ஆர்ஜன்டீனா இலகுவான வெற்றிகளை ஈட்டியபோதிலும் நொக் அவுட் சுற்று அவ்வணிக்கு இலகுவாக அமையவில்லை.

உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக அரை இறுதிக்கு முன்னேறும் நம்பிக்கையுடன் களம் இறங்கும் சுவிட்ஸர்லாந்து அணியுடனும் ஆர்ஜன்டீனா கடுமையாக போராட வேண்டிவரலாம்.

லீக் சுற்றில் அல்ஜீரியா (3 – 0), ஆஸ்திரியா (2 – 0), ஜோர்தான் (3 – 1) ஆகிய அணிகளை இலகுவாக  வெற்றிகொண்ட ஆர்ஜன்டீனா நொக் அவுட் சுற்றில் கடும் சவால்களை எதிர்கொண்டது.

அறிமுக அணி கோபா வேர்டே உடனான 32 அணிகள் சுற்றுப் போட்டியில் மேலதிக நேரத்தில் கோபா வேர்ட்டே வீரரினால் போடப்பட்ட சொந்த கோலே ஆர்ஜன்டீனாவை 3 – 2 என வெற்றிபெறச்செய்தது.

தொடர்ந்து 16 அணிகள் சுற்றில் எகிப்திடம் கடும் சவாலை  எதிர்கொண்ட ஆர்ஜன்டீனா உபாதையீடு நேரத்திலேயே 3 – 2 என வெற்றிபெற்றது.

இதேவேளை கத்தாருடனான தனது முதலாவது போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட சுவிட்ஸர்லாந்து,  தொடர்ந்து பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா (4 – 1), வரவேற்பு நாடான கனடா (2- 1) ஆகிய அணிகளை வெற்றிகொண்டது.

32 அணிகள் சுற்றில் அல்ஜீரியாவை 2 – 0 எனவும் 16 அணிகள் சுற்றில் கொலம்பியாவை பெனல்டி முறையில் (4) 0 – (3) 0 எனவும் வெற்றிகொண்ட சுவிட்ஸர்லாந்து 72 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் நொக் அவுட் சுற்றில் கடும் சவால்களை எதிர்கொண்டதால் கால் இறுதிப் போட்டி இரண்டு அணிகளுக்கும் பதட்டத்தை ஏற்படுத்தக்கூடும் என கருதப்படுகிறது.

இந்த இரண்டு அணிகளும் உலகக் கிண்ணத்தில் சந்தித்துகொண்ட இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஆர்ஜன்டீனா வெற்றிபெற்றுள்ளது.

1966இல் 2 – 0 என்ற கொல்கள் கணக்கிலும் 2014இல் நொக் அவுட் சுற்றின் மேலதிக நேரத்தில் 1 – 0 என்ற கொல் கணக்கிலும் ஆர்ஜன்டீனா வெற்றிபெற்றிருந்தது.

இந்த வருட உலகக் கிண்ணத்தில் ஆர்ஜன்டீனாவின் வெற்றி அலை தொடருமா அல்லது முந்தைய தோல்விகளுக்கு சுவிட்ஸர்லாந்து பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.