செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட விளக்கமறியல் கைதி

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட விளக்கமறியல் கைதி

0 minutes read

யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதியொருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்ற வழக்கு விசாரணை நடைபெற்ற போது , குறித்த நபரின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்து உத்தரவிட்டது.

அதனை அடுத்து விளக்கமறியல் கைதியை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து சென்ற போது, குறித்த நபர் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.