செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்தது காவி உடை பிக்குகளின் தியாகம் | அகலகட சிறிசுமண தேரர்

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்தது காவி உடை பிக்குகளின் தியாகம் | அகலகட சிறிசுமண தேரர்

1 minutes read

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும் முக்கிய பங்காற்றியதாக மகா சங்க மாநாட்டில் அகலகட சிறிசுமண தேரர் தெரிவித்துள்ளார்.

மகா சங்க மாநாட்டில் உரையாற்றிய அவர், நாட்டில் நிலவிய பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பௌத்த பிக்குகள் தமது வரலாற்றுப் பொறுப்புகளிலிருந்தும் கடமைகளிலிருந்தும் ஒருபோதும் பின்வாங்கவில்லை என குறிப்பிட்டார்.

“தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடூரமான தாக்குதல்களுக்கு மத்தியில், எமது காவி உடை தன் வரலாற்றுப் பொறுப்பையும் கடமையையும் தொடர்ந்து நிறைவேற்றியது. நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் கட்டியெழுப்புவதில் பிக்குகளின் தியாகம் முக்கியமானதாக அமைந்தது” என அகலகட சிறிசுமண தேரர் தெரிவித்தார்.

நாட்டின் வரலாறு, கலாசாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் மகா சங்கத்தினர் நீண்டகாலமாக வகித்து வரும் பங்களிப்பை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், எதிர்காலத்திலும் நாட்டின் நலன், ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகளில் மகா சங்கம் தொடர்ந்தும் பங்களிப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.