செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 282 கிலோகிராமிற்கும் அதிகளவான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

282 கிலோகிராமிற்கும் அதிகளவான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

0 minutes read

கொஸ்லந்த பகுதியில் சுமார் 280 கிலோகிராமிற்கும் அதிகளவான கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனகந்த, அலுத்வெல பகுதியில் நேற்று (01) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஒன்றுக்கு அமைவாக விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்திருந்தனர்.

மேற்படி கைது நடவடிக்கையின்போது சந்தேகநபரிடமிருந்து 280 கிலோ 240 கிராம் கஞ்சா அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

45 வயதுடைய ஜூலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே கைதாகியுள்ளார்.

இந்நிலையில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் என்பன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கொஸ்லந்த பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.