செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இரத்மலானை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் | இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது!

இரத்மலானை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் | இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது!

0 minutes read

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை, கடவல வீதிப் பகுதியில் 01 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரு சந்தேகநபர்கள் நேற்று வியாழக்கிழமை  (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் இரத்மலானை பகுதியில் வைத்து 22 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேகநபர் தெஹிவளை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்  தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 41 மற்றும் 48 வயதுடையவர்கள் ஆவார்.

துப்பாக்கிகளைக் கடத்தியமை மற்றும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவருக்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கியமை விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.