செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா 75 ஆண்டுகள் கடந்த நிலையில் மூன்றாம் உலகப்போரை தொடங்குகிறதா சீனா?

75 ஆண்டுகள் கடந்த நிலையில் மூன்றாம் உலகப்போரை தொடங்குகிறதா சீனா?

0 minutes read

திட்டமிட்டே சீனா கொரோனாவைப் பரப்பியதாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், சீனாவின் திட்டம் குறித்த சர்ச்சை வலுத்துள்ளது. இரண்டாம் உலகப் போர் முடிந்து 75 ஆண்டுகளாகியுள்ள நிலையில் அணு ஆயுதமோ, வேறு எந்த ஆயுதமோ இல்லாமல் கிருமி மூலமாக சீனா மூன்றாம் உலக யுத்தத்தை தொடங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனா மூன்றாம் உலகப் போரை தொடுத்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ராணுவ ரீதியாக பலம் வாய்ந்த அமெரிக்காவே இந்த கொரோனா தொற்று நோயால் 50 ஆயிரம் பேரை பறிகொடுத்து விட்டது.மேலும் பல லட்சம் பேர் உலகம் முழுவதும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்து மண்டியிட வைப்பதுடன் அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய வல்லரசாக தன்னை வளர்த்துக் கொள்ள சீனா வைரசை பரப்பியிருப்பதாக கிரகாம் ஆலிசன் என்ற அரசியல் அறிஞர் கருத்து தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.