செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை குறித்து விசாரணை!

யாழ் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை குறித்து விசாரணை!

0 minutes read

இந்த விடயம் தொடர்பாக மாநகர ஆணையாளரிடம் நேற்று (புதன்கிழமை) மாலை சுமார் 3 மணிநேரத்துக்கு மேலாக பொலிஸார் வாக்குமூலத்தினை பதிவு செய்திருந்தனர்.

காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், காவல்படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்தமை தொடர்பாக கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும் வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்அறிவித்துள்ளார்.

இந்த நடைமுறையைக் கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.