செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மோசமான வானிலை காரணமாக மோடியின் உத்தரப் பிரதேச பயணம் இரத்து!

மோசமான வானிலை காரணமாக மோடியின் உத்தரப் பிரதேச பயணம் இரத்து!

0 minutes read

ஐந்து மாநிலத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தோ்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மாா்ச் 7 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இதன்காரணமாக கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பாஜக சார்பில், பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, அமித் ஷா ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேசத்தில் பிஜ்னோர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதாக இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிலாக, அவர் காணொலி மூலமாக அங்குள்ள மக்களிடையே உரையாற்றி வருகிறார். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் மேலும் இரு இடங்களில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.