செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் தென்னாபிரிக்காவில் வெள்ள மீட்பு தீவிரம்

தென்னாபிரிக்காவில் வெள்ள மீட்பு தீவிரம்

0 minutes read

தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தை அடுத்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் பெய்த அடைமழையால் பெருகிய வெள்ளத்தில் சுமார் 400 பேர் உயிரிழந்தனர். கடந்த சனியன்று மீண்டும் மழை கொட்டியது.

மண்ணில் தண்ணீர் மிதமிஞ்சித் தேங்கிநிற்பதால் கூடுதல் வெள்ளம் ஏற்படலாம் என்று தென்னாபிரிக்காவின் வானிலை ஆய்வகம் கூறியது.

கடும் மழையால் வீதிகள் சேதமடைந்ததுடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. சுமார் 40,000 பேர் வீடுகளை இழந்தனர்.

நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான அம்லாஸியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் ஒரு சமூக மண்டபத்தில் தஞ்சம் புகுந்தனர்.

அண்மை நாட்களில் வானிலையைக் கணிப்பது சிரமமாக இருப்பதால் நகரங்களைத் தயார்ப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.