செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவு இளைஞர் தேசிய ரீதியில் சாதனை!

முல்லைத்தீவு இளைஞர் தேசிய ரீதியில் சாதனை!

1 minutes read

இலங்கை தேசிய யூடோ சம்மேளனம் நடத்திய யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

வடக்கு மாகாண யூடோ விளையாட்டுத்துறை வரலாற்றில் முதல் தடவையாக இந்தச் சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

தேசிய ரீதியில் இலங்கை தேசிய யூடோ சம்மேளனம் பொலனறுவை சர்வதேச உள்ளக விளையாட்டரங்கில் இம்மாதம் 25, 26, 27 ஆம் திகதிகளில் நடத்திய யூடோ போட்டியில் முப்படை வீரர்கள் மற்றும் தென்கிழக்கு வீரர்களுடன் 100 கிலோகிராமுக்கு உட்பட்ட ௭டைப் பிரிவில் போட்டியிட்டு முல்லைத்தீவு, அளம்பில் பகுதியைச் சேர்ந்த செல்வன் ஜெயதாஸ் அல்வின் வெள்ளிப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்து வடக்கு மாகாணத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இது தொடர்பாக பயிற்றுநரான வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எஸ்.நந்தகுமார் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கை தேசிய யூடோ சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டு பல தசாப்தங்களாகியிருந்தும் இதுவரை தேசிய மட்ட ரீதியில் நடத்தப்பட்ட யூடோ போட்டியில் வடக்கு மாகாணத்தில் இருந்து ஒரு வீரனும் பதக்கம் பெறவில்லை.

முதல் முறையாக முல்லைத்தீவு மாவட்ட யூடோ சங்கத்தின் வாயிலாக எனது பயிற்றுவிப்பினூடாக தனது அதீத திறமையால் இந்த வெற்றியை வென்ற வீரன் ஜெயதாஸ் அல்வினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.