செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அதானி நிறுவனம் குறைந்த விலையில் துறைமுகத்தை விற்றது

அதானி நிறுவனம் குறைந்த விலையில் துறைமுகத்தை விற்றது

1 minutes read

உலகளவில் பல வெற்றிகளை பெற்று தனது பெயரை உலகம் முழுதும் பதிய  செய்துள்ள அதானி நிறுவனத்தின் செயற்பாடு  இன்று அனைவரது பார்வையையும் அதன் பக்கம் திருப்பியுள்ளது.

அதானி நிறுவனம் மியான்மர் நாட்டில் உள்ள தனது துறைமுகத்தை மிகவும் குறைந்த விலைக்கு  விற்பனை செய்துள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில், ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மர் நாட்டில் உள்ள தனது துறைமுகத்தை 30 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாயில் 240 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.

அந்த துறைமுகத்திற்கான நிலங்களை குத்தகைக்கு எடுக்க மட்டுமே இந்திய ரூபாயில் சுமார் 720 கோடியையும், மற்ற பணிகளுக்கு சுமார் 296 கோடி ரூபாயையும் அதானி நிறுவனம் செலவிட்டு இருந்தது.

இந்நிலையில், அந்த துறைமுகத்தை 750 கோடி ரூபாய் குறைவாக அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் விற்பனை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.