செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வு!

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வு!

0 minutes read

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று (12) ஆரம்பமானது.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் அஞ்சலி நிகழ்வு யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அருகே இடம்பெற்றது.

ஒரு நிமிட அக வணக்கத்துடன் ஆரம்பமாகிய நினைவேந்தலின் போது, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

இறுதியில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.