செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அதிகாலை வெளிநாடு பறந்தார் ரணில்!

அதிகாலை வெளிநாடு பறந்தார் ரணில்!

0 minutes read

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ. கே. 649 என்ற விமானத்தினூடாக இன்று அதிகாலை ஜனாதிபதி நாட்டில் இருந்து புறப்பட்டார்.

டுபாய்க்குச் சென்று அங்கிருந்து, மற்றொரு விமானத்தின் ஊடாக பிரிட்டன் நோக்கி ஜனாதிபதி பயணிக்கவுள்ளார்.

பிரான்ஸுக்கான விஜயத்தின் போது, புதிய பூகோள நிதியுதவி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த மாநாடு எதிர்வரும் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் பாரிஸில் நடைபெறவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.