நேற்று நடைபெற்று முடிந்துள்ள கனடா பொதுத் தேர்தலில், பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி கட்சிக்கு மாபெரும் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
லிபரல் கட்சி 144 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. கென்சவேர்ட்டிவ் கட்சி 121 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
லிபரல் கட்சிக்கு 43 சதவீத வாக்குகளும் கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு 41 .7 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக சிபிசி தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி, கனடாவுக்குப் புதிய வரிகளை விதித்திருந்தார். கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப் போவதாகவும் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில், கனடா மக்கள் எதிர்த்தரப்பு கன்சர்வேட்டிவ் கட்சியை விட லிபரல் கட்சிக்கு ஆதரவளித்திருப்பதாகத் தெரிகிறது.
இருப்பினும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தோல்வியை ஒப்புக்கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொலிவ் கார்னிக்கு வாழ்த்துக் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்பின் வரியைச் சமாளிக்க கனடியர்கள் ஒன்றாய் இணைந்து செயல்பட வேண்டும் என்று தலைவர்கள் இருவரும் கேட்டுக்கொண்டனர்.