இஸ்ரேல் – ஈரான் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி, குறித்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடங்கியுள்ளதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். அதனை இரு நாடுகளும் மீற வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்தி : ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயாராகிறதா கட்டார்?
ஆனால், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் யுத்த நிறுத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையே ஈரானின் அரசாங்கத் தொலைக்காட்சி நிறுவனம் இஸ்ரேல் மீது யுத்த நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.
டிரம்ப்புடனான தொலைபேசி உரையாடலில் ஈரான் தாக்குதலை நிறுத்தினால் இஸ்ரேலும் நிறுத்தும் என்று அதன் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு கூறியதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.