அணு ஆயுத விவகாரங்கள் குறித்தும் இஸ்ரேல் மற்றும் ஈரானின் போர் நிறுத்தம் குறித்தும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், எதிர்வரும் வாரமளவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
தொடர்புடைய செய்தி : அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது என ஈரான் அறிவிப்பு!
அத்துடன், ஈரான் அணுசக்தி தளங்கள் மீதான பென்டகன் தாக்குதல்கள் வெற்றி பெற்றதாகவும் கூறினார்.
மேலும், ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதைத் தடுக்க அமெரிக்கா முயன்று வருவதாகவும், ஆட்சி மாற்றம் என்பது ஒரு சாத்தியமான விளைவு என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.