செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அகமதாபாத் விமான விபத்தின் முதற்கட்ட விசாரணை முடிவுகள் நாளை வெளியிடப்படும்!

அகமதாபாத் விமான விபத்தின் முதற்கட்ட விசாரணை முடிவுகள் நாளை வெளியிடப்படும்!

1 minutes read

இந்தியா – அகமதாபாத் நகரில் கடந்த ஜூன் மாதம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமான விபத்தின் முதற்கட்ட விசாரணை முடிவுகள், நாளை (11) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விமானம், அகமதாபாத்தில் இருந்து இலண்டன் நகருக்குச் செல்லவிருந்தது.

விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.

அத்துடன், விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்ததில் அங்கிருந்த 19 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்த 260 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழந்தோரின் உடல்கள் அனைத்தும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் மருத்துவமனைத் தலைவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி : விமான விபத்தின் விசாரணையில் ஐ.நா.வின் உதவியை நிராகரித்த இந்தியா!

இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்தின் முதற்கட்ட விசாரணை முடிவுகள், நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விசாரணையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விசாரணை அமைப்புகளும் இணைந்துகொண்டுள்ளன.

இந்த விபத்தின் முழுமையான ஆய்வு முடிவுகள் வெளிவர பல மாதங்களாகலாம் என்று கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.