செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் 500 முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்தாகும் நிலை!

இலங்கையில் 500 முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்தாகும் நிலை!

0 minutes read

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் இரத்துச் செய்யப்பட்டால் 500 வரையான முன்னாள் எம்.பிக்கள் ஓய்வூதியக் கொடுப்பனவை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் எம்.பிக்களின் ஒன்றியம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“ஓய்வூதியக் கொடுப்பனவில் வாழும் முன்னாள் எம்.பிக்கள் இந்த முடிவால் பாதிக்கப்படுவார்கள். சிலர் மருத்துவ செலவுகளைக்கூட கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.” – என்று மேற்படி ஒன்றியத்தின் செயலாளர் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

எனவே, ஓய்வூதியக் கொடுப்பனவை அரசு இரத்துச் செய்யக்கூடாது எனவும், அது ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.