செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மன்னார் சொர்க்கம் இல்லை – காற்றாலை மின்திட்டத்தினால் பறவைகளிற்கு ஆபத்து இல்லை | எரிசக்தி அமைச்சர்

மன்னார் சொர்க்கம் இல்லை – காற்றாலை மின்திட்டத்தினால் பறவைகளிற்கு ஆபத்து இல்லை | எரிசக்தி அமைச்சர்

1 minutes read

மன்னாரில் காற்றாலை மின்திட்டத்தினால்  பறவைகளிற்கும் இயற்கை சமநிலைக்கும் பாதிப்பு ஏற்படாது என எரிசக்தி அமைச்சர் குமாரஜயக்கொடி தெரிவித்துள்ளமைக்கு சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

காற்றாலை மின்திட்டத்தினால் பறவைகளிற்கு ஆபத்து என தெரிவிக்கப்படுவது ஆதாரமற்ற விடயம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நான் அந்த பகுதிக்கு சென்றுள்ளேன் காற்றாலைமின்திட்டத்தினால் பறவைகளிற்கு பாதிப்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை,மன்னார் முதல் பூநகரி வடக்கு முதல் அரசகாணி என தெரிவித்துள்ளார்.

மன்னாரை சில தரப்பினர் ஒரு சொக்கம் எனவும் அது காற்றாலை விசையாழிகளால் அழிக்கப்படலாம் என தெரிவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மன்னார் முதல் பூநகரி வடக்கு முதல் காணப்படும் பகுதி ஒரு தரிசு நிலம் மக்கள் பறவைகளை பற்றி பேசுகின்றனர் ஆனால்  அந்த பாதையில் பறவைகள் எதுவுமில்லைஎன தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் கருத்து குறித்து பதிவிட்டுள்ள சூழல் ஆர்வலர் மெலனி குணதிலக மழைக்காலத்தில் புவிவெப்பமடைதல் உண்மையா என அமைச்சரிடம் கேட்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சரின் கருத்து குறித்து பதிவிட்டுள்ள ரெகான்ஜயவிக்கிரம 2025 இல் அரசியல்வாதிகளின் முட்டாள்தனமான பதில்களில் இதுவே தலைசிறந்தது என குறிப்பிடலாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.