செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!

0 minutes read

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசமைப்பின் 61 ஈ(ஆ) பிரிவின்படி, அரசமைப்பு பேரவை இந்தப் புதிய நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய வரலாற்றில் இணைகின்றார்.

இலங்கை பொலிஸ் சேவையில் பொலிஸ் கான்ஸ்டபிள், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய மூன்று கட்டங்களையும் தாண்டி பொலிஸ்மா அதிபர் பதவிக்குத் தெரிவான முதலாவது பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.