செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் ஈரான் போர்: இங்கிலாந்து பெட்ரோல் நிலையங்களில் நாளொன்றுக்கு £2,00,000 மதிப்பிலான எரிபொருள் திருட்டு!

ஈரான் போர்: இங்கிலாந்து பெட்ரோல் நிலையங்களில் நாளொன்றுக்கு £2,00,000 மதிப்பிலான எரிபொருள் திருட்டு!

1 minutes read

ஈரான் போர் காரணமாக எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இங்கிலாந்து பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் திருட்டுச் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாண்டு பெப்ரவரி மாதம் ஈரான் போர் தொடங்கியது முதல், இங்கிலாந்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பணம் செலுத்தாமல் எரிபொருளை எடுத்துச் செல்லும் சம்பவங்கள் ஐந்தில் ஒரு பங்கு (20%) அதிகரித்துள்ளன.

தொழில்துறை புள்ளிவிவரங்களின்படி, தற்போது நாளொன்றுக்குச் சராசரியாக £1,94,000 (சுமார் 2 லட்சம் பவுண்டுகள்) மதிப்பிலான எரிபொருள் திருடப்படுகிறது.

இது போர் தொடங்குவதற்கு முந்தைய ஐந்து மாதங்களுடன் ஒப்பிடும்போது 48% அதிகமாகும்.

ஒரு நாளைக்குச் சராசரியாக 2,872 திருட்டுச் சம்பவங்கள் பதிவாகின்றன (முன்பு 2,400 ஆக இருந்தது).

நாளொன்றுக்குத் திருடப்படும் எரிபொருளின் அளவு 87,000 லிட்டரிலிருந்து 1,08,900 லிட்டராக உயர்ந்துள்ளது.

பெட்ரோல் நிரப்பிய பின் பணம் செலுத்தாமல் வாகனத்தை ஓட்டிச் செல்லுதல் அல்லது எரிபொருளை நிரப்பிய பிறகு தன்னிடம் பணம் இல்லை என்று கூறுதல் போன்ற முறைகளில் இந்தத் திருட்டுகள் அரங்கேறுகின்றன.

எரிபொருள் விலை உயர்வால் விரக்தியடைந்துள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கு மிரட்டல்கள், வன்முறை மற்றும் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாக ‘ஃபோர்கோர்ட் ஐ’ (Forecourt Eye) நிறுவனம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.