புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் மின்சார கட்டண உயர்வு: தவிக்கும் குடும்பங்களுக்கு அரசு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டுமென கோரிக்கை

மின்சார கட்டண உயர்வு: தவிக்கும் குடும்பங்களுக்கு அரசு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டுமென கோரிக்கை

1 minutes read

இந்த குளிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால், மிகவும் தேவையிலுள்ள நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கு அரசு கூடுதல் உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என்று இங்கிலாந்து எரிசக்தி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான Energy UK தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் கடுமையான விலை உயர்வு காரணமாக, தற்போதைய £150 Warm Home Discount திட்டத்தையும் தாண்டி சிலருக்கு “அவசரகால உதவி” தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக இந்த அமைப்பு கூறியுள்ளது.

லட்சக்கணக்கான மக்களுக்கு தற்போதைய மின்சாரக் கட்டணங்கள் செலுத்த முடியாதளவுக்கு சுமையாக மாறியுள்ளன.

ஓக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரவிருக்கும் புதிய எரிசக்தி கட்டண உச்சவரம்பை Ofgem என்ற ஒழுங்குமுறை ஆணையம் புதன்கிழமை அறிவிக்கவுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு மிக உயர்ந்த கட்டண வரம்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த குளிர்காலத்தின் இறுதியில், மின்சாரக் கட்டண பாக்கியாக வாடிக்கையாளர்கள் எரிசக்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகை இதுவரை இல்லாத அளவாக £4.7 பில்லியன் ஆக உயர்ந்திருந்தது.

தற்போதைய கட்டண உச்சவரம்பு, எதிர்வரும் புதன்கிழமையன்று 4% வரை அதிகரிக்கக்கூடும் என்று Cornwall Insight என்ற எரிசக்தி ஆலோசனை நிறுவனம் கணித்துள்ளது. இது ஏற்கெனவே ஜூலை மாதத்தில் ஏற்பட்ட 13% கட்டண உயர்வை தொடர்ந்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.