செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் அப்டேட்

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் அப்டேட்

1 minutes read

தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திர நடிகரான அசோக் செல்வன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அன்பில் அவன்’ படத்தில் இடம் பெற்ற ‘கல்லா நிக்கிறியே..’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், சபுமோன், அப்து ஸமது , கதிர் பாலு, மகா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி உள்ள இந்த திரைப்படத்தை ஐங்கரன் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அனிச்சமே சகி ஊடலே.. தீரா தீரா தேடலே.. ‘ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேதா எழுத பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். திருமணத்திற்கு பிறகு தம்பதிகள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பேசா நிலையை பின்பற்றும் போது உள்ள… காதலின் உணர்வுகளை துல்லியமாக பாடல் வரிகள் பேச.. அதற்கு வசீகர குரலுக்கு சொந்தக்காரரான சித்  ஸ்ரீராமின் குரலில் ஒலிக்கும் போது… இசை ரசிகர்கள் மெய் மறந்து ரசிக்கிறார்கள்.

இதன் காரணமாக இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் லட்சக்கணக்கான டிஜிட்டல் பார்வைகளை பெற்று இசை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.