இரு நாடுகளுக்கும் மே மாத நடுப்பகுதியில் இரண்டு நாட்கள் உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில் நடந்த இந்தப் பேச்சுக்களில், அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த விமானப்படை அதிகாரிகளும், சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இது இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களாகும். பிராந்திய பாதுகாப்பு, இரண்டு நாடுகளினதும் விமானப்படையினருக்கான எதிர்கால பயிற்சி வாய்ப்புகள், ஒத்திகைகள் குறித்தும் இந்தப் பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.