செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை அழிந்து.. அழிந்து… மீண்டு வரும் பூமி!

அழிந்து.. அழிந்து… மீண்டு வரும் பூமி!

2 minutes read

இந்த உலகம் உருவாகி சுமார் 454 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனுக்கும் இதே வயதுதான். இந்த கோளில் மட்டும்தான் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளது. இங்கே ஆக்சிஜன் சுவாசிக்காத உயிரினங்களும் கூட உண்டு. அதே போல கொதிக்கும் நீரிலும், கரிக்கும் உப்பிலும், உறையும் பனியிலும் வாழும் உயிரினங்களும் இருக்கின்றன. நமது மனித இனம் வாழ்வதற் காகத்தான் இந்த உலகம் உருவானதா..! இல்லவே இல்லை. நாம் இந்த பூமியில் வழிப் போக்கர்கள்தான். ஆனாலும் கூட, நாம்தான் இந்த புவியின் இயற்கையை ஆட்டிப் படைக் கிறோம்.

புவியின் வெள்ளைத் தொப்பி.!

பூமியின் இரு துருவங்களும் ஒரு பனிக் குல்லாயை மாட்டிக் கொண்டு திரிகின்றன. ஆனால் இதன் உள்ளே, மையப்பகுதி இரும்பு நிக்கல் கலந்த குழம்பினால் கொதித்துக் கொண்டு இருக்கிறது. அதனால் பூமிக்கு காந்தப்புலனும் உள்ளது. பூமியின் வட துருவம் ஆர்க்டிக் என்றும், தென் துருவம் அண்டார்டிக் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் ஏராளமான தாது வளங்களும், அதன் விளைவாய் உருவான உயிரினங்களும், மனித சமுதாயத்துக்குப் பெரிதும் உதவுகின்றன.

முதல் உயிரி & பிராண வாயு பரிணாமம்.!

earth_370_copyபூமியின் ஆற்றல் மிகுந்த வேதியல் பரிணாமத்தால், சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன், தானாகவே இரட்டிப்பான ஒரு மூலக்கூறின் மூலம் உலகின் பொது மூதாதையரான ஓர் உயிரி உருவானது. அதன் பின், உயிரினங்களின் துவக்க கால பரிணாமம், முதல் ஒளிச் சேர்க்கை உயிரி வந்த பின்னரே துவங்கியது. ஒளிச் சேர்க்கையின் வயது 350 கோடி ஆண்டுகள். அதற்கு முன் வாழ்ந்த உயிரிகள் எல்லாம் ஹைடிரஜன்/ ஹைடிரன் சல்பைடை பயன்படுத்தி உயிர் வாழ்ந் தன. சுமார் 30 கோடி ஆண்டுகளுக்கு முன் வந்த சயனோபாக்டீரியா (Cyanobacteria)என்ற நீலப் பச்சை பாசிதான், இந்த உலகை ஆக்சிஜன் நிறைந்த உலகாக, ஆக்சிஜன் உள்ள வளி மண்டலமாக என உலகின் முகவமைப்பையே மாற்றிய ஜாம்பவான். நாம் சுவாசிக்க ஆக்சிஜனை உருவாக்கிய பெருமை இந்த நீலப் பச்சை பாசிக்கு உண்டு. இதற்கு அப்புறம் உயிரின பரிணாமம் பெரும் வீச்சுடன் நடைபெற்றது. அது போல, 350 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பூமியின் காந்தப் புலன்/பரப்பு உருவாயிற்று. அதன் ஈர்ப்பு விசையால்தான் வளிமண்டலம் ஓடிப்போகாமல் காப்பாற்றப்பட்டுள்ளது.

அழிந்து.. அழிந்து… மீண்டு வரும் பூமி.!

உலகம் உருவானதிலிருந்து ஏராளமான பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. அவை மூலம் ஒட்டுமொத்த உயிரின அழிவு நேரிட்டுள்ளான. இதுவரை உருவான உயிரினங்களில் சுமார் 98% இந்தப் பேரழிவுகளால் உலகத்தின் முகத்திலிருந்து துடைத்து எறியப்பட்டன. அதுவும் பெர்மியன்(பேர்மியன்) காலத்தில் நிகழ்ந்த அழிவுதான் பெரும் சாவு (Great Dying) நிறைந்த பேரழிவு என்று சொல்லப்படுகிறது. இந்த மகா அழிவு சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. அதில் 96% கடல் வாழ் உயிரிகளும் மற்றும் 70% நில ஜீவன்களும் ஒட்டு மொத்தமாய் இந்த உலகை விட்டு சென்றுவிட்டன. பூச்சிகளையும் இந்த ஆழிப்பேரலை/அழிவு விட்டு வைக்கவில்லை. அழிந்து போனவைகளில் முக்கியமானவை, பாலூட்டிகள் போலிருந்த ஊர்வன. இந்த அழிவுக்குப் பின் சுமார் 30 கோடி ஆண்டுகளுக்குப் பின்தான் முதுகெலும்பிகள் தங்களின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தன.

 

நன்றி : பேரா.சோ.மோகனா | கீற்று இணையத்தளம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.