யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு நடைபவனியை ஆரம்பித்துள்ளனர். அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்திய நடைபவனியானது ஏ9 வீதியூடாக பயணித்து அநுராதபுரத்தை சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாடுகளையடுத்து, நடைபவனி ஆரம்பமானது.
யாழ். கைடிதயில் அமைந்துள்ள சித்த மருத்துவப் பிரிவு மாணவர்கள் சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
வீதிகளின் இருமருங்கிலிருந்தும் தமது ஆதரவைத் தெரிவித்த மாணவர்கள், பேரணியுடனும் இணைந்து கொண்டிருந்தனர்.