செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அதிக பெரும்பான்மை எனக்கு உள்ளது உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டவும்

அதிக பெரும்பான்மை எனக்கு உள்ளது உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டவும்

0 minutes read

 

எனக்கு அதிக பெரும்பான்மை உள்ளது உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் இணைந்து தற்போது அலரி மாளிகையில் விஷேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவரே பிரதமர் என்றும், அந்தப் பெரும்பான்மை தனக்கு இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஹெல உறுமயவின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.