ஏ.ஆர். ரஹ்மான் தன் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய போது, “எனது 25 வயது வரை, தற்கொலை எண்ணம் எனக்குள் எழுந்ததுண்டு. அவ்வப்போது நம்மில் பலரும், நாம் சிறப்பானவன் கிடையாது என நினைக்கிறோம். நான் என் தந்தையை இழந்ததால் இவ்வாறு உணர்ந்திருக்கிறேன்..
அதன்பின் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. என் தந்தையும் இறந்து விட்டதால், நான் அதிக திரைப்படங்களை ஏற்கவில்லை. எனக்கு 35 திரைப்படங்கள் கிடைத்தது, அவற்றில் நான் இரண்டை மட்டுமே தேர்வு செய்தேன்” எனக் கூறினார்.
