ஒரு குட்டி விமானம் நேபாளத்தின் லுகியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்றது.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் மீது மோதி நொறுங்கியது. ஹெலிகாப்டரின் இணை விமானி துங்கானா, உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராம்பகதூர் காட்கா ஆகியோர் அதே இடத்தில் பலியாகினர்.
மற்றொரு உதவி சப்-இன்ஸ்பெக்டர் ருத்ரா பக்தூர் ஸ்ரேஸ்தா காத்மண்டுவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
