செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை வாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்!

வாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்!

2 minutes read
  1. வாழ்க்கைத் திட்டம் இல்லாமை

    தெளிவான வாழ்க்கைத் திட்டத்தை வகுத்தவர்கள் எல்லோருமே வெற்றி பெற்ற மனிதர்களாக உலா வருகிறார்கள். தங்கள் முன்னேற்றத்திற்கு இதை இதை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு அவற்றை மனதில் கொண்டு இவர்கள் செயல்பட்டு இருப்பார்கள். அல்லது, தங்கள் திட்டங்களை வரிசைப்படுத்தி எழுதிவைத்து செயல்படுத்தி இருப்பார்கள்.அந்தத் திட்டங்களை உருவாக்கி, அதை அவ்வப்போது சீர் செய்து உபயோகித்து இருப்பார்கள். 85 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கையில் திருப்திகரமான திட்டம் வகுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.‘திட்டம் இல்லாவிட்டால், நமது வெற்றியை வேறொருவர் கையில் கொடுத்துவிட நேரும். அவர்களும் கூட மற்றவர்கள் வெற்றியைப் பற்றி கவலைப்பட நேரம் இல்லாதவர்களாக இருப்பார்கள்’’ என்கிறார் மெக்கீ.

    2. சமயத்துக்கு தகுந்தபடி திறனை பயன்படுத்த தவறுதல்

    வர்த்தகத்தின் போக்கு நாளுக்கு நாள் நேரத்துக்கு நேரம் மாறிக்கொண்டே இருக்கும். வினியோகத்தைக் காட்டிலும் வேலைக்கு கூடுதல் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் எப்போதும் உங்கள் இடத்தைக் கைப்பற்ற தயாராக இருப்பார்கள்.<க்ஷழ்>நிறுவனங்கள் தங்கள் செலவுகளைச் சுருக்கவோ, அல்லது, தங்கள் முதலீட்டுக்கு அதிக பட்ச லாபத்தை ஈட்டவோ விரும்புகின்றன. ‘‘உங்களைக் காட்டிலும் கூடுதல் லாபம் சம்பாதித்துத் தரக்கூடிய நபர் உங்கள் இடத்துக்கு நியமிக்கப்படும் வாய்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.

    3. பலனை வெளிப்படுத்த தவறுதல்

    பொறுப்புணர்வுதான் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது வெற்றியாளர்களுக்குப் புரியும். நீங்கள் உங்கள் பொறுப்பை தட்டிக்கழித்தால், மூலையில் தூக்கி வீசப்படுவீர்கள் என்பதை உணர வேண்டும். வர்த்தகத்தையோ, தொழில் துறையையோ புரிந்து கொள்ளுங்கள். தொலைக் காட்சியில் எந்த நிகழ்ச்சிக்கு வருவாய் அதிகமோ, யாருடைய நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்கிறார்களோ அவர்களுக்கு மதிப்பு கூடும். பார்வையாளர்கள் விரும்பாத நிகழ்ச்சிகள் தூக்கி எறியப்படும். அது போலத்தான், உங்களால் வருவாய் குறையும்போது உங்களுக்குப் பதிலாக வேறு நபர் நியமிக்கப்பட்டு விடுவார்.

    4. தகுதியையும் திறமையும் குழப்புதல்

    நேரடித் தொடர்பைக் காட்டிலும், மெயில் மூலம் தொடர்பு கொள்வதே இந்தக் காலத்தில் போதுமானதாக சிலர் கருதுகிறார்கள். இது அவர்களுடைய தனித்தகுதி எனவும் நினைக்கிறார்கள். இருந்தாலும் நேரடித் தொடர்புதான் தனித்திறமையை வெளிப்படுத்தவும், நிலையான வெற்றிக்கு அடித்தளமாகவும் கருதப்படுகிறது. இ&ஹம்ல்;மெயில் மூலம் தொடர்பு கொள்ளுதல் ஒருவருடைய தகுதியை வெளிப்படுத்தலாம். ஆனால், நேரடியாக பேசிப் பழகுதல் அவரிடைய திறமையை முழுமையாக பிறர் புரிந்துகொள்ள உதவும் என்பதை உணர வேண்டும்.

    5. உங்களுக்குப் பதிலாக வேறொருவர்

    பணிபுரியும் இடங்களில் எதுவுமே நிரந்தரம் இல்லை. ஒரு விஷயத்தை நீங்கள் மட்டுமே செய்ய முடியும் என்பது இல்லை. ஒரு காரியத்தை நீங்கள் மட்டுமே செய்ய முடியும் என்றும், நீங்கள் செய்தால்தான் அது சரியாக இருக்கும் என்றும் எப்போது நம்பத் தொடங்குகிறீர்களோ, அப்போதே உங்கள் வீழ்ச்சி தொடங்கிவிடுகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

    6. கேள்வி கேட்பதில் விருப்பம்

    சிறந்த தலைவர்கள் யாவருமே கேள்விகள் கேட்பதையே விரும்புவார்கள். எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிந்தவராக தன்னைக் காட்டிக் கொள்கிறவர்கள் தோல்வியையே சந்திப்பார்கள். நிறைய கேள்விகள் கேட்டவர்கள் பின்னாளில் வெற்றிச் சிகரத்தை தொட்டிருக்கிறார்கள். அறிவுதான் ஆற்றல் என்பதே உண்மை. வெற்றியாளர்கள் எல்லோருமே புதிய யோசனைகளையும் அணுகுமுறைகளையும் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள்.அவ்வப்போதைய சூழலுக்குத் தகுந்தவாறு யோசனைகளை கடைப்பிடிக்கிறவர்கள் தனக்குக் கீழ் பணிபுரிகிறவர்களால் விரும்பப்படுகிறார்கள்.

    7. புகழ்ச்சிக்கு மயங்கி பொழுதைக் கழித்தல்

    தங்களைச் சுற்றிலும் புகழ்பாடும் கூட்டத்தை சேர்த்திருப்பவர்கள் உழைப்பை வீணாக்குகிறார்கள். அவர்கள் பாடும் பாட்டு உண்மையாக இருந்தாலும் சரி, பொய்யாக இருந்தாலும் சரி. அந்தப் பாட்டுக்கு மயங்குகிறவர்கள் இருக்கிறார்கள். புகழ்பாடும் நபர்களை தட்டிக் கேட்கத் தவறுகிறார்கள். வெற்றிகரமான மேலாளர்கள் அனைவருமே, மற்றவர்களுக்குள் இருக்கும் புத்தி கூர்மையையும், படைப்புத் திறனையும் ஊக்குவிக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

    8. பிறரை பாராட்ட மறுப்பது

    தொழிலாளர்கள் அல்லது ஊழியர்களால் கிடைக்கும் லாபத்தை அல்லது உழைப்பின் பலனை அங்கீகரித்து பாராட்ட மறுப்பவர்கள் நஷ்டத்தையே சந்திப்பார்கள். தங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பாராட்டுகளை தொழிலாளர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். வெற்றியாளர்கள் யாவருமே, சக தொழிலாளர்களைப் பாராட்டி வேலை வாங்கியவர்கள் என்பதை நிதர்சனமான உண்மை. தங்களுடைய யோசனைகளைத் திருடி முதலாளிகள் பெயர் சம்பாதித்தை தொழிலாளர்கள் விரும்புவதில்லை.

    9. தன்னை முன்னிறுத்த தவறுவது

    வெற்றி பெற்றவர்கள் தங்களுடைய வெற்றிக்கு காரணத்தை பிறருக்கு தெரிவிக்காமல் மறைப்பதும் தவறு. நேர் வழியில் வெற்றி பெற்றவர்கள் அதை பகிரங்கமாக தெரிவிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு உதாரணமாக முடியும். வெற்றியின் ரகசியத்தை தெரிவிக்க மறுத்தால், அவர்கள் தவறான வழியில் வெற்றி பெற்றதாக பிறர் கருத இடம் கொடுத்துவிடும்.

    10. குறைகளை உணரத் தவறுதல்

    வெற்றி பெறுவதற்கான எத்தனையோ முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மிகச் சிறந்த யோசனைகளைக் கூட கடைப்பிடிப்பீர்கள். இருந்தாலும் உங்கள் பாதையில் வரும் தடங்கல்களை எதிர் கொள்வதற்கு உங்கள் நண்பர்களிடமோ, சகாக்களிடமோ, உங்களுக்குப் பயிற்சி அளித்தவரிடமோ ஆலோசனை கேட்க தவறியிருப்பீர்கள். உங்கள் குறைகள் உங்களைக் காட்டிலும் பிறருக்கு நன்றாக தெரியும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். தவறினால், தோல்வியைச் சந்திக்க வேண்டியதுதான்.

 

நன்றி : முத்துமணி இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.