4
அகதிகளாக தமிழ்நாட்டில் தங்கியிருந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஈழத்தமிழர்கள் எதிர்வரும் 23ஆம் நாள் தாயகம் திரும்பவுள்ளனர்.
அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு சுயவிருப்பின் அடிப்படையில் நாடு திரும்பும் இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை செய்துள்ளது.
நாடு திரும்பும் 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேரில், 23 ஆண்களும், 25 பெண்களும் அடங்கியுள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.