செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பேய் விரட்டும் சடங்கில் குழந்தை உயிரிழப்பு: பெற்றோருக்கு சிறைபேய் விரட்டும் சடங்கில் குழந்தை உயிரிழப்பு: பெற்றோருக்கு சிறை

பேய் விரட்டும் சடங்கில் குழந்தை உயிரிழப்பு: பெற்றோருக்கு சிறைபேய் விரட்டும் சடங்கில் குழந்தை உயிரிழப்பு: பெற்றோருக்கு சிறை

1 minutes read

 

மலேசியாவில் பேய் விரட்டும் சடங்கில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக பெற்றோர் உள்பட 3 பேருக்கு சிறைதண்டனை விதித்து பினாங்கு மாகாணத்தில் உள்ள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

பெற்றோர் மற்றும் அவர்களின் உறவினர் ஆகியோருக்கு ஓராண்டு ஜெயில் மற்றும் 10,000 ரிங்கிட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.93 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது.

மலேசிய நாட்டின் வடக்கு பினாங்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேய் விரட்டும் சடங்கு நடைபெற்றது. இதில், சுவா வான் ஸýயன் (2) என்ற குழந்தையுடன், அதன் பெற்றோர் உள்பட 8 பேர் பங்கேற்றனர். அவர்கள், போர்வையால் மூடப்பட்டனர்.

இதையடுத்து வெகுநேரம் நடைபெற்ற அந்த சடங்கில், அந்தக் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது. இது தொடர்பாக பெற்றோர் மற்றும் உறவினர் ஆகிய 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 2008ஆம் ஆண்டில் முஸ்லிம் தம்பதி இருவர் புகைப்பழக்கம் மற்றும் நோய்களில் இருந்து குணமடைவதற்காக என்று கூறி சடங்கு நடத்தப்பட்டது. அப்போது, இருவரும் அவர்களது குடும்பத்தினரால் அடித்துக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.