எம்.எஸ்.ராஜேஸ்வரி, ‘நாம் இருவர்’ திரைப்படத்தில் பாடிய காந்தி மகான் என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
அதன் பின்னர் சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா (டவுன் பஸ்), அம்மாவும் நீயே அப்பாவும் நீயே (களத்தூர் கண்ணம்மா), மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி (குமுதம்), பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே (செங்கமலத் தீவு), பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா (திக்குத் தெரியாத காட்டில்) ஆகிய பாடல்களை பாடி சினிமாத் துறையில் மிகவும் பிரசித்தி பெற்றார்.
இவர் பல மொழிகளில் 500 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 1931-ம் ஆண்டு பிறந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி தனது 87 வது வயதில் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.
