மே 19-ந்தேதி இளவரசர் ஹாரி தனது காதலி மெர்க்கலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். மணப்பெண் மெர்க்கலின் நெருங்கிய தோழி என்பதால் பிரியங்காவுக்கும் இந்த அழைப்பு அனுப்பப்பட்டு இருக்கிறது. இவர் மணப்பெண்ணின் தோழியாகவும் இருப்பார் என்று தகவல் வெளியானது.
பிரியங்கா சோப்ரா கூறுகையில், “மெர்கல் எனது நெருங்கிய தோழி. அவர் திருமண பந்தத்தில் இணையப்போவது மகிழ்ச்சியை அளிக்கிறது. திருமணத்துக்கு பிறகு அவருடைய வாழ்க்கை முற்றிலும் மாறப் போகிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவருடைய ஒரு தோழியாக திருமணத்தில் நான் கலந்து கொள்கிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.
