காவினுக்கு பதிலடியா கொடுத்தார் லாஸ்லியா.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா மற்றும் கவின். இவரது காதல் காட்சிகளை பார்க்கவே பலரும் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்தனர். ஆனால் நிகழ்ச்சிக்கு பின் இவர்களிடையே எந்த தொடர்பும் இல்லாமல் அவரவர் வேலைகளை மட்டும் பார்த்து வருகின்றனர்.

லாஸ்லியா தற்போது பிரண்ஷிப் படத்திலும், கவின் லிப்ட் என்னும் படத்திலும் நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணாடியின் முன் நின்று கொண்டு செல்பி எடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுக்கிட்டா எப்பயாது உதவும், லிப்ட் படத்தின் போது எடுத்தது என்று பதிவிட்டிருந்தார்.

தற்போது இதை போன்று லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணாடியின் முன் நின்று செல்பி எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வாழ்க்கை உங்களுக்கு ஏதாவது கற்பிக்க முயற்சிக்கிறது, எனவே உங்களது தவறுகளை ஏற்றுக் கொண்டு உங்களை கண்ணாடியில் பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

லாஸ்லியாவின் இந்த கருத்து கவினை மறைமுகமாக கூறுகிறாரோ என்று நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

ஆசிரியர்