செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கன்னடத்தில் சந்தானம்

கன்னடத்தில் சந்தானம்

1 minutes read

காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம்.

இவர் நடிப்பில் டிக்கிலோனா என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த்ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.

இவர் கன்னடத்தில் இதற்குமுன் லவ்குரு, கானா பஜானா, விசில், ஆரஞ்ச் போன்ற பல படங்களை இயக்கி உள்ளார்.


தமிழ், கன்னட மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை புரொடக்‌ஷன் எண்10 (சந்தானம்15) என்று தயாரிக்கிறார்கள்.

இதில், சந்தானம் ஜோடியாக, ‘தாராள பிரபு’ படத்தில் நடித்த தான்யா ஹோப் நடிக்கிறார்.

மேலும், பாக்யராஜ், பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். 

இதன் படபிடிப்பு இன்று பூஜையுடன் பெங்களூரில் தொடங்கியுள்ளது. இந்த படபிடிப்பை தொடர்ந்து சென்னை, பாங்காங்க், லண்டன் நகரங்களில் படபிடிப்பு நடைபெறுகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை சுதாகர் எஸ்.ராஜ் மேற்கொள்ள அர்ஜூன் ஜன்யா இசையமைக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.