செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஜய் அண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படப்பிடிப்பு நிறைவு

விஜய் அண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படப்பிடிப்பு நிறைவு

1 minutes read

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் அண்டனி கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. 

இதில் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார். 

இவர்களுடன் சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், பிரணதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

படத்தை இயக்கும் விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கதாநாயகனாக நடிக்கும் இசையமைப்பாளர் விஜய் அண்டனியுடன் அச்சு ராஜாமணி இணைந்து இசையமைக்கிறார். 

இந்த திரைப்படத்தை இன்பினிடி இன்வென்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி கமல் போக்ரா, தனஞ்ஜெயன் பங்கஜ் போக்ரா மற்றும் பிரதீப் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். 

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு ‘கோடியில் ஒருவன்’ எனும் வசூல் ரீதியான வெற்றி படத்தை வழங்கியிருக்கும் விஜய் அன்டனியின்  நடிப்பில் ‘மழை பிடிக்காத மனிதன்’ தயாராகி வருவதால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.