ஈழமும் தெல்லிப் பளையும் நடிகை சுஜாதாவும்

யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் மாவிட்டபுரம், வீமன்காமம், வறுத்தலைவிளான் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் கட்டுவன், ஏழாலை ஆகிய ஊர்களும், தெற்கில் மல்லாகம் ஏழாலை என்னும் ஊர்களும், மேற்கில் அளவெட்டி, பன்னாலை என்பனவும் உள்ளன. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 10 மைல்கள் தொலைவில் இவ்வூர் உள்ளது.
இந்த ஊரில் தான் நடிகை சுஜாதா பிறந்து வளர்ந்த ஊர் .

பின்னாளில்

இருதய நோயால் அவருடைய உடல்நிலை மோசம் அடைந்ததால் ஏப்ரல் 6, 2011 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் மரணம் அடைந்தார்.
பலர் தவறான செய்திகளைப் பரப்புவதால் இந்த ப்பதிவு இடம்பெறுகிறது

கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுஜாதா அவர்களின் இயற்பெயர் விஜயலட்சுமி இவர் 1952 டிசம்பர் 10ல் இலங்கை, யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை என்ற ஊரில் பிறந்தார். அக்காலத்தில் இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் சென்று பணியாற்றி வந்தார்கள். சுஜாதாவின் தந்தை சங்கரன் மேனன் கேரளத்தில் இருந்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் விலங்கியல் ஆசிரியராக 1956 வரை பணியாற்றினார். பின்னர் தென்பகுதியில் உள்ள காலியில் பணியாற்றினார். சுஜாதாவும் அங்கு பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். பதினான்காம் வயதில் குடும்பத்துடன் கேரளத்திற்குத் திரும்பினார். அங்கு தனது குடும்பத்தினருடன் குடியேறிய சுஜாதா சிறிது காலம் தையல் வேலை செய்து வந்தார், 1977-ம் ஆண்டில் ஜெயகர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். திவ்யா மருத்துவராக பணி புரிகிறார்.

போலீஸ் ஸ்டேஷன்' என்ற மலையாள நாடகத்தில் முதன்முதலாக நடித்தார். 1971-ம் ஆண்டில் இயக்குநர் ஜோஸ் பிரகாஷ்,தபஷ்னி’ என்ற மலையாள படத்தில், சுஜாதாவை அறிமுகம் செய்தார். 1972-ம் ஆண்டில், கே. பாலசந்தர் இயக்கத்தில் `அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் அறிமுகமானார். அந்த படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து சுஜாதா தமிழ் பட உலகில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

இவர் நடித்தபடங்கள்

அவர்கள்,
கடல் மீன்கள்,
ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது,
மயங்குகிறாள் ஒரு மாது,
அமைதிப்படை,
விதி,
வில்லன்,
நட்புக்காக,
வரலாறு
அந்தமான் காதலி
பலப்பரீட்சை,
பரீட்சைக்கு நேரமாச்சு
உழைப்பாளி,
பாபா

பிரசாத்து மலையாள ப்படம்

சிறப்புப்பானவை

மேலும் வரலாறு’ படத்தில், அஜீத்குமாரின் அம்மாவாக நடித்த கடைசித்தமிழ் ப்படம் படம். அதன்பிறகு சுஜாதா தமிழில் நடிக்கவில்லை.

இவர் சிவாஜி கணேசன், முத்துராமன், சிவகுமார், ரஜினிகாந்த், கமலஹாசன், நாகேஸ்வரராவ், சோபன்பாபு, சிரஞ்சீவி, மோகன் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். இடையில் இவர் என்ன ஆனார் என்பது கூட பலருக்கும் தெரியவில்லை. மேலும், சுஜிதா பெரிதாக பேட்டிகளை கொடுத்தது இல்லை. பொது நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொண்டது இல்லை. இறுதியாக சிவாஜி கனேசன் இறப்பின் போது அவரது கடைசி ஊர்வலத்தில் மனோரம்மாவின் கையை பிடித்தபடி நடந்து சென்றமை உங்களுக்கு ஞாபகம் இருக்கும் அது தான் சுஜாதாவை இறுதியாக பொது இடத்தில் பார்த்தது. அதன் பின்னர் அவரை எந்த ஒரு நிகழ்விலும் காண முடியவில்லை.

இவர் மரணத்தைக் குறித்து யாரும் பெரிய அளவில் பேசப்படவில்லை.சுஜாதாவின் மரணத்தின் போது தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருக்கின்றது. அதில் பிரச்சாரம், தேர்தல், ஆட்சி மற்றும் என பல பிரச்சனைகள் அரசியலில் ஏற்பட்டதனால் அவருடைய மரணம் குறித்து எந்த ஒரு ஊடகங்களிலும் பெரிய அளவில் பேசப்படவில்லை. இது தமிழ் திரைப்பட உலகத்தில் மிகப்பெரிய சோகமான சம்பவம் ஆகும். ஆனால் இன்று வரை திரைப்படத்துறை யினரால் இந்த குணசித்திர நடிகைக்கு எந்த மகுடமும் சூட்டப்படாதது ஏன்?
கேரளக் காரி என்பதாலா ?அல்லது யாழ்ப்பாணத்துப் பெண் என்பதாலா ?

இன்று வரை இலங்கைத் தமிழரின் பங்களிப்பின் பெரும் பகுதியினால் தான் திரைப்படத்துறை வாழுகிறது என்பதை நாமும் நினைவில் கொள்ளல் வேண்டும்.

இலங்கைத் தமிழரால் தான் தமிழன் என்ற ஒரு இனம் உண்டு என்று உலகின் மாந்தருக்கு தெரிய வந்தது.

சுஜாதா ‘போலீஸ் ஸ்டேஷன்’ என்ற மலையாள நாடகத்தில் தான் முதன்முதலாக நடித்தார். அந்த நாடகத்தின் மூலம் அவருக்கு ‘தபஷ்வினி’ என்ற மலையாள படத்தில் சுஜாதா அறிமுகமானார்.

அவரின் நடிப்பை பார்த்து கே. பாலச்சந்தர் அவர்கள் 1977ம் ஆண்டு “அவள் ஒரு தொடர்கதை” என்ற படத்தில் முதன்முதலாக தமிழில் அறிமுகனார். அந்த படம் மகத்தான அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சுஜாதா தமிழ் திரைப்பட உலகில் பிரபலமானர்.

கோவி. மணிசேகரனின் இயக்கத்தில் வெளிவந்த “தென்னங்கீற்று’, ரஜினி, கமல் இணைந்து நடித்த “அவர்கள்’, இளையராஜாவின் இசையமைப்பில் வெளிவந்த “அன்னக்கிளி’ ஆகிய படங்கள் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு போயின.

பஞ்சு அருணாசலத்தின் கதை, வசனத்தில் வெளிவந்த “உறவு சொல்ல ஒருவன்’, மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த “கண்ணுக்கு மை எழுது’, ஸ்ரீதர் இயக்கிய “ஆலய தீபம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

“அந்தமான் காதலி’, “வா கண்ணா வா’, “அண்ணன் ஒரு கோயில்’, “பரீட்சைக்கு நேரமாச்சு’ உள்ளிட்ட படங்களில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார்.

ஆரூர் தாஸ் வசனத்தில் வெளிவந்த “விதி’ திரைப்படத்தில் சுஜாதாவின் நடிப்பும் வசன உச்சரிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டன.

மறந்து விடாதீர்கள் .

திருமணத்துக்குப் பின் ஒரு சில படங்களில் நடித்தார். சிறிய இடைவெளிக்குப் பின் குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். “உழைப்பாளி’, “தாலாட்டு பாட வா’, “கொடி பறக்குது’, “அமைதிப்படை’, “பாபா’, ‘வில்லன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இறுதியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘வரலாறு’ படத்தில் நடித்தார்.
அதுவே அவரின் இறுதிப்படம் என்று பலர் கூறுகிறார்கள். ஆனாலும்

இவர் நடித்த கடைசி ப்படம் தெலுங்கில் வெளிவந்த நாகர் யுனாவின் படமான ஸ்ரீ ராம ராசு(2006) என்பதாகும்.

இவரது கடைசி தமிழ்ப் படம் வரலாறு (2004) ஆகும்.இவர் தனது சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி,மற்றும் நந்தி விருது போன்றவற்றைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை சுஜாதா இலங்கையின் தென்பகுதியில் உள்ள காலி என்ற இடத்தில் பிறந்ததாகவும் சிலர் குறிப்பிடுவர். ஆனால் மகாஜனாக் கல்லூரியில் இருந்து மாற்றலாகி 1956ம் ஆண்டுதான் ஆசிரியர் மேனன் அவர்கள் காலிக்குச் சென்றதற்கான குறிப்புகள் இருக்கின்றன. அச்சமயத்தில் நான்கே வயதான சுஜாதா பள்ளிக்குச் சென்றிருக்க வாய்ப்பில்லை. எனவே தந்தையாரின் காலிக்கான இடமாற்றத்தின் பின்புதான், சுஜாதா காலியில் உள்ள றிப்பொன் பெண்கள் பாடசாலையில் ஆரம்ப கல்வியைக் கற்றார். எனவேதான் நடிகை சுஜாதா பிறந்த இடம் காலி என்று சிலர் நம்புகின்றனர். தென்னிலங்கையில் கல்வி கற்றதால் தமிழைவிட சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் அவர் புலமை பெற்றிருந்தார். புதின்ம வயதுவரை இலங்கையில் வாழ்ந்த சுஜாதா, அவரது 14வது வயதில் பெற்றோருடன் கேரளாவிற்குத் திரும்பிச் சென்று அங்கே தனது கல்வியைத் தொடர்ந்தார்

சுஜாதாவின் வாழ்வில் பல சோகங்கள் பல
அவற்றை இங்கே குறிப்பிடுவது எனது நோக்கமல்ல

திருமண பந்தத்தின் மூலம் சுஜாதாவைச் சுற்றி ஒரு வேலி உண்டாக்கப்படுகிறது. எப்படி? யாரால்?

அந்த வேலியை மீறி சுஜாதாவால் ஏன் வர முடியவில்லை? இதற்கெல்லாம் சுஜாதாவின் மரணம் வரை பதில் கிடைக்கவில்லை. இனி கிடைக்கப்போவதும் இல்லை.
1990-ம் ஆண்டுக்குப் பிறகு, பெரும்பாலும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்;

ஒருகட்டத்தில், இவரிடம் கதை சொல்லவும், கால்ஷீட் பெறவும், ஷூட்டிங் விஷயங்களைத் தெரிவிப்பதுமே பெரிய சவாலாக இருந்திருக்கிறது. இவரின் இருப்பே அடிக்கடி மர்மமாகிவிடும் அந்த அளவுக்கு இவரிடம் எளிதில் பேசுவதும் நெருங்குவதும் சினிமா துறையினருக்கே சவாலான காரியமாகியிருக்கிறது.

ஏதோ ஒரு பிரச்சனையில் இருக்கிறார் எனவும் அவர் மீது சுமை உள்ளது என பலருக்கும் தெரிந்தது. ஆனாலும் அவரின் சுமையை இறக்கிவைக்கும் வடிகாலாக யாராலும் இருக்க முடியவில்லை. அதற்குச் சுஜாதா இடம் கொடுத்தாரா என்பதும் தெரியவில்லை.

மனச்சஞ்சலத்தால் சற்று வழிமாறிப்போகும் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த ஒரு பெண், குடும்பவாழ்க்கையில் சந்திக்கும் பதற்றங்களும், சவால்களையும் பரபரப்பான பிண்ணனியில் விளக்கியிருக்கும் படம் “மயங்குகிறாள் ஒரு மாது”. இந்தப்படத்தைப் பார்த்தவர்கள் இருப்பீர்கள்.

இவரின் நடிப்பின் திறமையை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

மாணிக்கவாசகர் வைத்தியலிங்கம்

ஆசிரியர்