ரஜினியை தடுத்த சிரஞ்சீவி இன்று மீண்டும் அரசியலுக்கு வருகிறார்

ரஜினியிடம் அரசியலில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை கூறிய பிரபல நடிகர் சிரஞ்சீவி ’அரசியலை விட்டு நான் விலகினாலும் அரசியல் என்னை விட்டு விலகவில்லை என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி நடிகராக மட்டுமின்றி ஆந்திர மாநில அரசியலில் ஈடுபட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008ஆம் ஆண்டு பிரஜ்யா ராஜ்யம் என்ற கட்சியை ஆரம்பித்த சிரஞ்சீவி 2009 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அவரது கட்சி 294 இடங்களில் போட்டியிட்ட நிலையில் 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட சிரஞ்சீவியே ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தார்.

இதனை அடுத்து 2011ம் ஆண்டு தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து கொண்டார் என்பதும் அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் எம்பியாக ராஜ்யசபாவில் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி தீவிரமாக படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த சிரஞ்சீவி ’அரசியலில் இருந்து விலகி தான் இருக்கிறேன், ஆனால் அரசியல் என்னை விட்டு விலக வில்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து மீண்டும் அவர் தீவிர அரசியலில் இறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் தமிழக அரசியலில் களம் இறங்க கடந்த ஆண்டு தயாரானபோது சிரஞ்சீவி தான் அவரை தடுத்ததாகவும் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுரை கூறியதாகவும் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்