அல்லு ஸ்டூடியோ சிரஞ்சீவி நேற்று திறந்து வைத்தார்

நடிகர் அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் ஹைதராபாத் அருகே கட்டியுள்ள அல்லு ஸ்டூடியோவை, நடிகர் சிரஞ்சீவி நேற்று திறந்து வைத்தார்.

அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த், கீதா ஆர்ட்ஸ் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார். ஆஹா ஓடிடி தளத்தையும் நடத்தி வருகிறார்.

அவர், ஹைதராபாத் அருகிலுள்ள காந்திபேட் பகுதியில், அல்லு ஸ்டூடியோஸ் என்ற படப்பிடிப்பு தளத்தைக் கட்டி வந்தார்.

அதன் வேலைகள் முடிவடைந்ததை அடுத்து, அல்லு அர்ஜுனின் தாத்தாவும் தெலுங்கு குணசித்திர நடிகருமான அல்லு ராமலிங்கையா பிறந்த நாளான நேற்று இந்த ஸ்டூடியோ திறந்து வைக்கப்பட்டது.

அல்லு அர்ஜுனின் மாமா நடிகர் சிரஞ்சீவி திறந்து வைத்தார். நடிகர்கள், நாகபாபு, அல்லு சிரிஷ் உட்பட அவர்கள் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

ஆசிரியர்