June 7, 2023 5:47 am

பிரம்மாண்டமான பான் இந்திய படங்களை தயாரிக்கும் ஐசரி கே. கணேஷ்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

‘ஜெயம் ரவி, அர்ஜுன், ஜீவா, இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரகுமான், யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பங்குபற்றும் இரண்டு பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படங்களை அடுத்தடுத்து   தயாரிக்கவிருக்கிறோம்’ என வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நெஷனல் லிமிடெட்டின் நிறுவன தலைவரும் தயாரிப்பாளரும் நடிகருமான ஐசரி. கே. கணேஷ் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நெஷனல் நிறுவனம், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நெஷனல் லிமிடெட் என்ற பெயரில் பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதன்முறையாக ஈடுபட்டிருக்கிறது.

இந்தியாவின் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் இந்நிறுவனத்தின் பங்குகளின் விற்பனை இலாபத்துடன் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில் இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற தொடக்க விழாவில் பங்குபற்றி தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில்,

”எங்களது நிறுவனம் தற்போது ஐந்து திரைப்படங்களை வெளியிட திட்டமிட்டிருக்கிறது. மேலும், ஐந்து திரைப்படங்களை தயாரித்து வருகிறது. புதிதாக ஐந்து திரைப்படங்களின் பணிகள் தொடக்க நிலையில் இருக்கிறது.

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில் ஜெயம் ரவியின் நடிப்பில் பிரம்மாண்டமான பட்ஜட்டில் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை தயாரிக்கிறோம்.

நடிகர் அர்ஜுன் மற்றும் ஜீவா நடிப்பில், பா. விஜய் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் பெயரிடப்படாத பான் இந்திய திரைப்படம் ஒன்றையும் தயாரிக்கிறோம்.

தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பதில் மட்டுமல்லாமல் திரைப்படத்தை விநியோகம் செய்வதிலும், திரைப்படத்தை பட மாளிகையில் திரையிடுவதிலும் கவனம் செலுத்தவிருக்கிறோம்” என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்