June 7, 2023 7:41 am

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடங்கி வைத்த ‘மை டியர் டயானா’ இணையத் தொடர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பிக் பொஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு ‘மை டியர் டயானா’ என பெயரிடப்பட்டு, அதன்  படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு அதிதியாக பங்குபற்றி இணையத் தொடரின் படபிடிப்பு கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

அறிமுக இயக்குநர்கள் பி. கே. விஜய் மற்றும் கிரிதர் ராமகணேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல்  இணையத் தொடர் ‘மை டியர் டயானா’. இதில்  நடிகர் மணிகண்ட ராஜேஷ், நடிகை மகாலட்சுமி,  ஜனா குமார், மகேஷ் சுப்பிரமணியம், அக்சயா பிரேம்நாத், துரோஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வாட்ஸ் பிரபு ஒளிப்பதிவு செய்யும் இந்த இணையத் தொடருக்கு குஹா கணேஷ் இசையமைக்கிறார். ரொமான்டிக் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த இணையத் தொடரை வோர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் பேரலல் குளோப் ஆகிய  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

‘விலங்கு’, ‘அயலி’, ‘செங்களம்’, ‘சுழல்’  என வித்தியாசமான இணையத்தொடர்களுக்கு பாரிய வரவேற்பு கிடைத்து வருவதால், மை டியர் டயானா எனும் இணையத் தொடருக்கும் டிஜிட்டல் தள பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்