செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மெட்ராஸ் மேட்னி | திரைவிமர்சனம்

மெட்ராஸ் மேட்னி | திரைவிமர்சனம்

2 minutes read

மெட்ராஸ் மேட்னி – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ்

நடிகர்கள் : காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி , விஷ்வா, ஜோர்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக், சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம் மற்றும் பலர்.

இயக்கம் : கார்த்திகேயன் மணி

மதிப்பீடு : 3/5

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற குணச்சித்திர நடிகரான காளி வெங்கட் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் என்பதால் ரசிகர்களிடம் ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது.

படக் குழுவினரும் நடுத்தர வர்க்கத்து மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக விவரித்திருக்கிறோம் என்று உரக்கச் சொல்லியதால் படத்தை பட மாளிகையில் காண ரசிகர்கள் சென்றனர் ‌ அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

சென்னையில் முதியோர் இல்லம் ஒன்றில் தங்களுடைய மீதமுள்ள வாழ்க்கையை பலர் வாழ்ந்து வருகிறார்கள். இதில் கடந்த காலத்தில் பிரபலமான அறிவியல் புனைவு கதை எழுத்தாளர் ஜோதி ராமையா( சத்யராஜ்) வும் ஒருவர்.

இவர் அங்குள்ள முதியவர்களிடம் கதைகளை சொல்லி சந்தோஷப்படுத்துகிறார். இந்த தருணத்தில் அந்த முதியோர் இல்லத்தை பராமரிக்கும் பெண் நிர்வாகி ஒருவர் எழுத்தாளரிடம் நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் எதார்த்தமான வாழ்வியலை கதையாக விவரிக்க இயலுமா..! என கேட்கிறார்.

அவர்களுடைய வாழ்க்கையில் சாகசமும், சுவராசியமும் இல்லை  என்ற எண்ணம் கொண்ட அந்த அறிவியல் புனைவு கதை எழுத்தாளர்.. ஒரு கட்டத்தில் நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் கதையை எழுதுவதற்காக சில மனிதர்களை சந்திக்கிறார்.

அதில் மூவுருளி வாகனத்தை இயக்கி வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் கண்ணன் ( காளி வெங்கட்) எனும் சாரதி ஒருவரையும் சந்திக்கிறார். அவரது நாளாந்த வாழ்க்கை… எழுத்தாளரின் அவதானிப்பை விட சுவாரசியமான அனுபவமாக இருப்பதை உணர்ந்து அதை கதையாக எழுதத் தொடங்குகிறார்.

அவர் கதை சொல்வதிலிருந்து இப்படத்தின் கதை – காட்சி மொழியாக – திரை மொழியாக விரிவடைகிறது. கண்ணன் – கமலம் தம்பதிகளுக்கு தீபிகா ( ரோஷினி ஹரி பிரியன்) – தினேஷ் ( விஷ்வா) ஆகிய இருவரும் வாரிசுகள்.

இவர்களை வாழ்க்கையில் நல்ல நிலைக்கு முன்னேற வேண்டும் என என்ற ஒற்றை சிந்தனையில் கண்ணன் செயல்படுகிறார். இவர்களுக்கு வாழ்க்கை என்ன விடயங்களை கற்றுக் கொடுக்கிறது?… இவர்கள் அதிலிருந்து தங்களது இலக்குகளை எப்படி அடைகிறார்கள்? இதற்கு இடையே இவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன ? என்பதே இப்படத்தின் திரைக்கதை.

கதாபாத்திரங்களில் குழந்தை பருவ காட்சிகள் – கதாபாத்திர அறிமுகங்கள்-  என நீளும் முதல் பாதி…. ரசிகர்களின் பொறுமையை எல்லை மீறி சோதிக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி-  ரசிகர்களுக்கு அற்புதமான ஃபீல் குட் படைப்பாக அமைந்திருக்கிறது.

கண்ணன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட் அந்த கதாபாத்திரத்தை அவருக்கே உரிய இயல்புடன் அனாயசமாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.

உடல் மொழி, உச்சரிப்பு ஆகியவற்றில் வட்டார மொழியை பாவிக்கவில்லை என்றாலும்… தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி கவனிக்க வைக்கிறார்.

குறிப்பாக கார் ஓட்டுவதற்காக பயிற்சி மேற்கொள்ளும் இடம்… தன் மகளுடன் தொலைபேசியில் உரையாடும் காட்சிகளில் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் காளி வெங்கட்.

சத்யராஜ் எழுத்தாளர் கதாபாத்திரத்தில் இயக்குநர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார்.

காளி வெங்கட்டின் மகளான தீபிகா வேடத்தில் நடித்திருக்கும் ரோஷினி ஹரிப்பிரியன் – தன் திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாரை சந்தித்து பேசும் காட்சியில் அவரின் தனித்துவமான நடிப்பு வெளிப்படுகிறது.

ஆனந்த் ஜி கே வின் ஒளிப்பதிவும், கே. சி. பால சாரங்கனின் பின்னணி இசையும் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறது.

படத்தின் முதல் பாதியை பொறுமையுடன் கடந்து விட்டால்… இரண்டாம் பாதியில் அற்புதமான அனுபவத்தை பெறலாம்.

மெட்ராஸ் மேட்னி – குடும்ப நாவல்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More