1964 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க தேசிய திரைப்பட விருது விழாவான சரசவிய விருது விழாவில் வருடத்தின் சிறந்த தமிழ் மொழி திரைப்படமாக ஊழி திரைப்படம் வரலாறு படைத்துள்ளது.
இந்தத் திரைப்படம் 4 முக்கிய பிரிவுகளில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறந்த தமிழ்த் திரைப்படம் விருதை இயக்குனர் ரஞ்சித் ஜோசப் பெற்றார். சிறந்த வசன கர்த்தாவுக்கான விருதை தீபச்செல்வன் பிரதீபன் பெற்றார். சிறந்த எடிட்டிங் விருதை சிவலிங்கம் அருணாசலமும் சிறந்த ஒளிப்பதிவு விருதை ராஜேஷ் வர்மாவும் பெற்றனர்.
இலங்கையில் திரையரங்குகளில் வெளியிட தணிக்கை செய்யப்பட்ட பதிப்பு சமர்ப்பிக்கப்பட்டாலும், சரசவிய நடுவர் மன்றம் அசல், தணிக்கை செய்யப்படாத சர்வதேச பதிப்பை அடிப்படையாகக் கொண்டு திரைப்படத்தை மதிப்பீடு செய்து விருது வழங்கியுள்ளது.
இத்திரைப்படம் ஈழத் தமிழ் மக்களின் போருக்குப் பிந்தைய அரசியல் மற்றும் பொருளாதாரப் போராட்டங்களைப் பற்றி பேசுகிறது. 36ஆவது சரசவிய விருது விழா நேற்று முந்தினம் (24) BMICH இல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.